புதுக்கோட்டை மாணவர்கள் 9 பேர் உக்ரைனில் சிக்கி தவிப்பு
புதுக்கோட்டை மாணவர்கள் 9 பேர் உக்ரைனில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை,
உக்ரைனில் ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அங்கு மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவ-மாணவிகள் தவித்து வருகின்றனர். அங்குள்ள தமிழர்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. சிலர் நாடு திரும்பியும் வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்கள் மருத்துவ படிப்புக்காக உக்ரைன் சென்றதும், அங்கு அவர்கள் சிக்கித்தவித்து வருவதும் தெரிய வந்துள்ளது. அவர்களது பெயர் விவரம், தொடர்பு எண் மற்றும் பெற்றோரின் விவரங்களை புதுக்கோட்டை மாவட்ட போலீசார் சேகரித்துள்ளனர். மேலும் மாணவர்களின் பெற்றோருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மூலம் தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தெரிவித்தார்.