தரகம்பட்டி
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக பாலவிடுதி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை செய்தபோது, அங்கு மது விற்ற மம்பத்தையூரைச் சேர்ந்த கருப்பகவுண்டர் மகன் ரவி, கடவூர் காளியம்மன் கோவிலைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பழனிசாமி, சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் முருகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.