ஓசூரில் அரசு பள்ளி மாணவி தற்கொலை
ஓசூரில் அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
ஓசூர் அலசந்தம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் சந்திரலேகா (வயது 16). இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மாணவி வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்திரலேகா இறந்தார். தற்கொலை குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.