தியாகதுருகம் அருகே மினி லாரி மோதி விவசாயி சாவு
தியாகதுருகம் அருகே மினி லாரி மோதி விவசாயி சாவு
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிலிங்கம் (வயது 62). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வேங்கைவாடி கிராமத்தில் இருந்து தியாகதுருகத்தில் உள்ள கரும்பு கோட்ட அலுவலகத்துக்கு மொபட்டில் சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சின்னமாம்பட்டு பிரிவு சாலையில் சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த மினிலாரி ஜோதிலிங்கம் ஓட்டி வந்த மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தியாகதுருகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜோதிலிங்கம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் தட்சிணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் மினி லாரி டிரைவர் ராஜாகுமார் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.