போலீஸ்காரரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம்

சாலை விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

Update: 2022-03-01 14:41 GMT
திண்டுக்கல்:

கொடைக்கானலில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

 இதையடுத்து அவருடைய குடும்பத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விபத்து காப்பீட்டு தொகையாக ரூ.30 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் காப்பீட்டு தொகைக்கான காசோலையை பாலசுப்பிரமணியின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்