மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-03-01 12:06 GMT
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 350 மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,29,500 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை வழங்கினார். மேலும், காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், நாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வூதியர்களுக்கான ஆணைகளையும், ஊனமுற்றோருக்கான ஊதிய உதவித்தொகையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்