மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி: எலக்ட்ரீசியனுக்கு 4 ஆண்டு ஜெயில்

மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில், எலக்ட்ரீசியனுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-02-28 22:06 GMT
சேலம்:
தலைவாசல் அருகே உள்ள பெரியேரி பகுதியை சேர்ந்தவர் காந்திசெல்வன் (வயது 22), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி 9-ம் வகுப்பு மாணவி ஒருவரை காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதுதொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் போக்சோ சட்டத்தில் காந்திசெல்வனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற காந்திசெல்வனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்