பணகுடி:
பணகுடி உலகம்மன் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி தெய்வநாயகி (வயது 39). இவர்களுக்கு சந்தனசெல்வம் என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலையில் தெய்வநாயகி தண்ணீர் பிடிப்பதற்கு தெருவிற்கு வரும்போது அடையாளம் தெரியாத சுமார் 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் தெய்வநாயகியின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.