வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
பாளையங்கோட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் குரு (வயது 23). பொக்லைன் ஆபரேட்டர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குரு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குரு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.