முசிறி அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலி

முசிறி அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலியானார்.

Update: 2022-02-28 19:42 GMT
முசிறி, மார்ச்.1-
முசிறி அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் பலியானார்.
மின்வாரிய கணக்கீட்டாளர்
முசிறியை அடுத்த ஆங்கியம்கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர்ரெட்டியார்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில்தா.பேட்டை-முசிறி ரோட்டில் சேருகுடி கிராமத்தில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி டிரைவர் தற்கொலை
முசிறியை அடுத்த சூரம்பட்டி மேட்டு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி. இவரது மகன் இளையராஜா (31). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இளையராஜா மது குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.இந்தநிலையில் மது குடிப்பதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து வாந்தி எடுத்துள்ளார். இதற்கிடையில் வேலைக்கு சென்ற மனைவி வீடு திரும்பியதும், இது பற்றி கேட்டுள்ளார். அப்போது, தான் இளையராஜா விஷம் குடித்தது தெரியவந்தது. உடனடியாக  திருச்சி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்