திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை அருகே திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-28 19:19 GMT
பேட்டை:

நெல்லை பேட்டையை அடுத்த நரசிங்கநல்லூர் திருநங்கை காலனியை சேர்ந்தவர் வினோஸ்ரீ (வயது 26). திருநங்கையான இவர் நேற்று காலையில் தனது வீட்டில் மின் விசிறியில் துப்பட்டா மூலம் தூக்குப்போட்டு உயிருக்கு போராடினார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த தூய்மை பணியாளர், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வினோஸ்ரீயை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே வினோஸ்ரீ உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்