லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

எஸ்.புதூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-28 18:18 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள புழுதிபட்டி கிராம பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வர்ணபட்டி கிராமத்தைச் சேர்ந்த மெய்யன் மகன் ஆறுமுகம் (வயது 35). குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் கணேசன் (32) ஆகியோர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.இது குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சிங்கம்புணரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு 2 பேரையும் சிவகங்கை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் விற்பனை செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்