ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-02-28 18:15 GMT
பனைக்குளம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது வாக்குச்சாவடி ஒன்றில் நடந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி தலைமையின் உத்தரவின்படி பாரதிநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் கவுன்சிலருமான ஆர்.ஜி. மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா, முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் ரெத்தினம், சாமிநாதன், மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார்,முன்னாள் எம்.பி. நிறைக்குளத்தான், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் பாதுஷா, பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ஜெயகார்த்திகேயன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்கள் வாலாந்தரவை ஜெயபால், பாரதி நகர் ராஜேந்திரன், மாரியப்பன், தங்கவேலு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஷ், மகளிரணி செயலாளர் ஜெய்லானி சீனிகட்டி, வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர்கள் கருணாகரன், மோகன்பாபு, ராமமூர்த்தி, வழுதூர் ஜெகன், ஒன்றிய செயலாளர்கள் தர்மர், லோகிதாசன், ஜானகிராமன், அந்தோணிராஜ், கருப்பையா, குப்புசாமி, பரமக்குடி நகர செயலாளர் ஜமால், மொட்டையன் வலசை கோபால், பெருங்குளம் ஊராட்சி  தலைவர் சிவகுமார், நாகாட்சி கல்யாணராமன், ஒன்றிய பாசறை சுந்தர்,
இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால் பாண்டியன், முன்னாள் நகர் செயலாளர் வரதன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சரவணகுமார், விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், ராமேசுவரம் நகர செயலாளர் அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முடிவில், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகி ராமன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்