ஆம்பூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆம்பூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-02-28 18:13 GMT
ஆம்பூர்

ஆம்பூர் நகர பகுதியான கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). இவர் பைபாஸ் சாலையில் கடப்பாகல் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவிகா (வயது 26). 
இவர், நேற்று முன்தினம் வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் தேவிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவிகாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆனதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்