திருப்பத்தூர் அஞ்சல் கோட்டத்தில் மொபைல் பேங்கிங் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்
திருப்பத்தூர் அஞ்சல் கோட்டத்தில் மொபைல் பேங்கிங் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருப்பத்துார்
திருப்பத்துார் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பத்துார் அஞ்சல் கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் இன்டர்நெட், மொபைல் பேங்கிங் மற்றும் ஏ.டி.எம். மூலமாக பண பரிவர்த்தனை செய்ய இயலும். மேலும் வங்கிக் கணக்கில் இருந்து அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு இணையவழி மூலம் பணம் பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற பகுதியில் வசிக்கும் விவசாயிகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயனடையலாம்.
எனவே மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அருகில் உள்ள அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கை தொடங்கி எளிய முறையில் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். மேலும் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயனடையலாம். இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.