லாலாப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். 12-ந் தேதி நடக்கிறது
லாலாப்பேட்டையில் வருகிற 12-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை பெறும் நோக்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் உள்ள ஜி.கே. உலக பள்ளியில் நடைபெற உள்ளது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்ய உள்ளன.
இந்த முகாமில் 5-ம் வகுப்பு தேர்ச்சி முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வி தகுதிகளை உடைய வேலை நாடுபவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலைகளை தேர்வு செய்து பயன் பெறலாம். விருப்பம், தகுதி உள்ளவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தற்குறிப்பு மற்றும் அனைத்து கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.