ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

Update: 2022-02-28 17:20 GMT

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியம் ஏந்தல் காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி லீலா(வயது 50). இவர் நேற்று அத்தியூரில் உள்ள தனது தங்கை அம்மாசியை பார்த்து விட்டு, மதியம் 2 மணியளவில் அந்த வழியாக வந்த பெரியகொள்ளியூரை சேர்ந்த பஞ்சன் மகன் கோவிந்தராஜ்(40) என்பவரின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறி பகண்டை கூட்டுரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பகண்டை கூட்டுரோடு அருகே சாலையில் உள்ள சிறிய வளைவில் வந்த போது எதிரே கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் டிரெய்லரை பார்த்த கோவிந்தராஜ் திடீரென பிரேக் பிடித்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். இதில் பின்னால் அமர்ந்திருந்த லீலா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது டிராக்டர் டிரெய்லரின் பின்பக்க டயர் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி லீலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்