புவனகிரி அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டரில் தீ மின்கம்பி உரசியதால் விபத்து
புவனகிரி அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
சேத்தியாத்தோப்பு,
புவனகிரி அருகே மிராலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 50). இவருக்கு சொந்தமான விளைநிலத்தில் நெல் அறுவடை செய்யப்பட்டது. பின்னர் வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு அவர், வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.
உடனே டிரைவர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது.