பொது மயானம் அமைக்கக்கோரி பெண்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பொது மயானம் அமைக்கக்கோரி பெண்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி:
ஆண்டிப்பட்டியை சேர்ந்த தேன்சுடர் பெண்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் பொது மயானம் அமைத்து, தீண்டாமைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு பெண்கள் இயக்க செயலாளர் புஷ்பம் தலைமை தாங்கினார். பின்னர் பெண்கள் இயக்கத்தினர், தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்தனர்.