ஜேடர்பாளையம் அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை

ஜேடர்பாளையம் அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை

Update: 2022-02-28 16:21 GMT
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே உள்ள பெருச்சாக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்தான் (வயது 70). கூலித்தொழிலாளி. இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் இ்ல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் விஷம் குடித்தார். 
இதை பார்த்த குடும்பத்தினர் முத்தானை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்தான் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்