ஒட்டுண்ணி உயிரி தொழில் நுட்ப முறையில் மீன் வளர்ப்பு பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒட்டுண்ணி உயிரி தொழில் நுட்ப முறையில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒட்டுண்ணி உயிரி தொழில் நுட்ப முறையில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது. இதில் ஒட்டுண்ணுயிரி குறித்தும், அதன் முக்கியத்துவம், தொழில்நுட்பத்துக்கு ஏற்ற நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு முறைகள், பயன்பாடுகள், செயல்திறன் மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மீன்வளர்ப்பு துறை உதவி பேராசிரியர் அனிக்ஸ் விவேக் சந்தியா பயிற்சியை நடத்தினார்.
பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் சுஜாத்குமார் பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயனாளிகள் கலந்து கொண்டனர்.