நெல்லையில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை

சாலையில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்படுகிறது

Update: 2022-02-27 21:09 GMT
நெல்லை:
நெல்லை மாநகரில் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, சாலைகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை பொதுமக்களை அச்சுறுத்துவதுடன், விபத்து ஏற்பட காரணமாகவும் உள்ளன. இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நெல்லை சந்திப்பு பகுதியில் நேற்று நாய் பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மதுரையை சேர்ந்த நாய் பிடிக்கும் தனியார் அமைப்பு ஊழியர்கள் ஈடுபட்டனர். 
சந்திப்பு, சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், சி.என்.கிராமம், கண்ணம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இந்த பணி நடைபெற்றது. சுருக்கு கம்பி மூலம் நாய்களை லாவகமாக பிடித்து வாகனத்தில் ஏற்றினர். 50-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிபட்டன.
பின்னர் அவற்றை ஸ்ரீபுரம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்