பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

விடுமுறையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-02-27 20:33 GMT
தக்கலை:
தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனை சுமார் 3½ ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை கேரள அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
இங்கு விலை உயர்ந்த மரங்களால் கலைநயத்தோடு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு அறை காண்பவர் கண்களை வியக்க வைக்கிறது. சுட்ட சுண்ணாம்பு, சிரட்டைகரி, கடுக்காய், முட்டை போன்றவற்றால் போடப்பட்டுள்ள தரை பகுதி பளிங்கு கல் ேபான்று காட்சி அளிக்கிறது. 
அரண்மனையின் அழகையும், கம்பீரத்ைதயும் பார்வையிட தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். அவர்கள் அரண்மனையை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். 

மேலும் செய்திகள்