திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 11 மாணவர்கள் உக்ரைனில் சிக்கி தவிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 11 மாணவர்கள் உக்ரைனில் சிக்கி தவிக்கிறார்கள்.
திருப்பத்தூர்
உக்ரைன் நாட்டில் கல்வி பயின்று வரும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீட்கும் படி திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகரை சந்தித்து விவரங்கள் அளித்தனர்.
அதன்பேரில் சென்னையில் உள்ள புலம்பெயர்ந்தோர் நல ஆணையரகத்தைத் தொடர்பு கொண்டு, உரிய விவரங்கள் தமிழக அரசின் மூலமாக உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் 3 மாணவ மாணவிகளுடன் மாவட்ட தொடர்பு அலுவலர் நேரடியாக வீடியோ கால் மூலமாக பேசினார். அப்போது அவர் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருக்குமாறு ஆறுதல் கூறினார்.