சலவை தொழிலாளி வீட்டில் தீ
சலவை தொழிலாளி வீட்டில் தீ பிடித்து துணிகள் கருகின.
சோழவந்தான்,
சோழவந்தான் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. சலவை தொழிலாளி. சிவராத்திரி விழாவை முன்னிட்டு இவர் தனது மனைவி தேவியுடன் அழகர்கோவில் தீர்த்தம் எடுக்க சென்று விட்டார்.இவரது இரண்டு மகன்களும் வேலைக்குச் சென்றுவிட்டனர். வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டில் உள்ளே இருந்து புகை வந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் நிலையஅலுவலர் பழனிமுத்து மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இவரது வாடிக்கையாளர்கள் கொடுத்த பட்டுசேலைகள் உள்ளிட்ட துணிகள் தீயில் கருகின. வீட்டில் இருந்த பிரிட்ஜ், டி.வி., மிக்சி, அயன்பாக்ஸ், டேபிள், சேர் மற்றும் துணிகள், டேபிள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்து விட்டது. கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் சம்பவ இடத்திற்கு வந்து சேதங்களை பார்வையிட்டார்.