திருவாலி லட்சுமிநரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவெண்காடு அருகே திருவாலி லட்சுமிநரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-02-27 18:00 GMT
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே பஞ்ச (5) நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அதாவது குரவலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீரநரசிம்மர், திருநகரியில் யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர், திருவாலியில் லட்சுமி நரசிம்மர் கோவில்கள் உள்ளன. இந்த 5 நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் தரிசித்தால் அகோபிலத்தை தரிசித்த பலன் கிடைப்பதாக ஐதீகம். சனிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் மிகவும் சிறப்பு பெற்ற திருவாலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி பல்வேறு பொருட்களால் நரசிம்மருக்கு அபிஷேகம் நடந்தன. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்