திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.

Update: 2022-02-27 10:55 GMT
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவம் விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 22ந்தேதி கருட சேவை உற்சவமும், 23-ந்தேதி சூரிய, சந்திர பிரபை புறப்பாடு நடந்தது. 24-ந்தேதி பல்லக்கு நாச்சியார் கோலத்தில், சுவாமி புறப்பாடு நடந்தது. 6-ம் திருநாளான கடந்த 25-ந்தேதி காலை 5.15 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ஆனந்த விமானத்தில் பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து யானை வாகன புறப்பாடு நடந்தது. பிரம்மோற்சவத்தின் முக்கிய திருநாளான தேர் திருவிழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை, பார்த்தசாரதி பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார்.

 தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதி வழியாக வந்த தேர் காலை 8.30 மணிக்கு நிலைக்கு வந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு, வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரமும், இரவு குதிரை வாகன சேவையும் நடக்கிறது. 28-ந்தேதி பகல் 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. மார்ச் 1-ந்தேதி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்