நெல்லை:வாலிபர் தற்கொலை

விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்

Update: 2022-02-27 05:29 GMT
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் அரிநாராயணன் (வயது 19). பிளஸ்-1 படித்து முடித்துள்ள நிலையில் வெளியே சுற்றித்திரிந்த இவரை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் மனம் உடைந்த அரிநாராயணன் விஷம் குடித்த நிலையில் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்