ஊராட்சித்தலைவர்கள் மாவட்ட குழு கூட்டம்

விருதுநகரில் ஊராட்சித்தலைவர்கள் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-02-26 19:27 GMT
விருதுநகர், பிப்.27-
விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊராட்சித்தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் உசிலைசெல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவர் அரசை எஸ்.எம். முனியாண்டி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி அ.ராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அரசியல் தலையீடு கூடாது. 14-வது மற்றும் 15-வது நிதிக்குழு நிதியினை ஊராட்சிகளுக்கு வழங்கவேண்டும். டேங்க் ஆபரேட்டர், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு கணக்கு எண் 7-ல் இருந்து ஊதியம் வழங்க அனுமதிக்க வேண்டும். ஊராட்சி செயலர், டேங்க் ஆப்பரேட்டர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலரை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பணியிடமாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகளுக்கு தேவைப்படும் பொருட்களை ஊராட்சி நிர்வாகம் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். அரசு கொள்முதல் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயலாளர் சதீஷ் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்