சேலையில் தீப்பிடித்ததில் உடல் கருகி பெண் சாவு

சமயபுரம்,பிப்.27-
மாமனார் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றிய போது, சேலையில் தீப்பிடித்ததில் பெண் உடல் கருகி இறந்தார்.
மெழுகுவர்த்தி ஏற்றினார்
சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் மேல தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது மனைவி அனுசுயா (வயது 22). சம்பவத்தன்று அனுசுயா அப்பகுதியில் உள்ள தனது மாமனாரின் கல்லறைக்கு மெழுகுவர்த்தி ஏற்ற மாமியாருடன் சென்றார். அப்போது அனுசுயா மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அருகிலிருந்த கல்லறையில் எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியின் தீ அனுசுயாவின் சேலையில் பிடித்தது.
சாவு
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அனுசுயாவை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு. சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.