பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் காயம்

தாயில்பட்டி அருகே பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.

Update: 2022-02-26 19:05 GMT
தாயில்பட்டி, 
சிவகாசியை சேர்ந்த சண்முகையா (வயது 65) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை தாயில்பட்டி ஊராட்சி மண்குண்டாம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 60-க்கும் மேற்பட்ட நபர்கள் ரோல் கேப் மற்றும் பாம்பு மாத்திரை உள்ளிட்ட பட்டாசுகளை தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பாம்பு மாத்திரைக்கு மருந்து கலக்கும் அறையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திருத்தங்கல் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த வைரமுத்து மகன் ராஜா (36) கலவையில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென தீப்பிடித்ததில் அவர் மீது தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்  மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த தீவிபத்து குறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் சண்முகையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்