பேரையூர்,
பேரையூர் போலீசார் திருட்டு மணல் தடுப்பு சம்பந்தமாக கவுரி மலை அடிவாரப் பகுதியில் ரோந்து சென்றனர். அப் போது மலை அடிவாரப் பகுதியில் எஸ்.கீழப்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (வயது31) என்பவர் அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தார். அவரை ரோந்து சென்ற போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டரை பறிமுதல் செய்து பேரையூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.