சுமை தூக்கும் தொழிலாளி சாவு

வலங்கைமான் அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தார். இது தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-26 18:21 GMT
வலங்கைமான்;
வலங்கைமான் அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தார். இது தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். 
தனியார் பஸ்
வலங்கைமான் கடைத்தெரு அருகே மன்னார்குடி மெயின்ரோட்டில் பட்டுக்கோட்டையில் இருந்து தனியார் பஸ் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் நோக்கி பயணிகளை ஏற்றி சென்றது. பஸ்சை வலங்கைமான் அருகே உள்ள புலவர்நத்தம் உடையார் தெருவை சேர்ந்த  சோமசுந்தரம் மகன் குமரேசன் (வயது 43) ஓட்டி வந்தார். பஸ்சில் வலங்கைமான் அருகே உள்ள ரெகுநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 
சேப்பாரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(41) (சுமைதூக்கும் தொழிலாளி) பயணம் செய்தார். 
டிரைவர் கைது
வலங்கைமான் அருகே கும்பகோணம்- மன்னார்குடி மெயின் ரோட்டில் பஸ் சென்ற போது பஸ்சில் பயணம் செய்த செந்தில்குமார் திடீரென  நிலைதடுமாறி பஸ்சில் இருந்து  கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்