தப்பியோடிய கைதியை தேடும் பணி தீவிரம்

வேலூர் ஜெயிலில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-02-26 17:30 GMT
வேலூர்

வேலூர் ஜெயிலில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கீழ்வெட்டுவாணம் பகுதியை சேர்ந்தவர் நந்தா என்ற முத்துக்குமார் (வயது 27). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி வேலூர் ஜெயில் காவலர் பயிற்சி பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முத்துக்குமார் தப்பியோடினார். 

இதுகுறித்து பாகாயம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 ஜெயில் வார்டன்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தப்பியோடிய முத்துக்குமாரை ஜெயில் அலுவலர்கள் அடங்கிய குழுவும், பாகாயம் போலீசார் அடங்கிய மற்றொரு குழுவும் தீவிரமாக தேடி வருகின்றனர். 5 நாட்களாகியும் அவரை பிடிக்க முடியவில்லை. முத்துக்குமார் பகல்வேளையில் பள்ளிகொண்டா மலைப்பகுதியில் உள்ள குழிகளில் பதுங்கி இருப்பதாகவும், இரவு வேளையில் ஊருக்குள் வருவதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அவரின் உத்தரவின்பேரில் முத்துக்குமாரை பிடிக்க விரைவுப்படை போலீஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பள்ளிகொண்டா மலைப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்