அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி திருட்டு

அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-26 17:12 GMT
கரூர்
 கரூர்
கரூர் வாங்கல் சாலை அரசு காலனியில் மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த முக்கால் பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கோவிலின் நிறுவனர் காலனி சேகர் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில்  பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்