காரில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது
டி.என்.பாளையம் அருகே காரில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
டி.என்.பாளையம் அருகே காரில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி பாரதி நகர் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கார் மற்றும் மோட்டார்சைக்கிள் நின்று கொண்டிருந்தது.
மேலும் அந்த காரில் ரேஷன் அரிசியை 3 பேர் ஏற்றிக் கொண்டிருந்ததையும் போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் அந்த காரை சோதனையிட்டனர். அப்போது காரில் சிறிய மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கைது
விசாரணையில், ‘அவர்கள் அளுக்குளி கோரமடை வடக்கு வீதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 34), பவானிசாகர் சி.ஆர்.கேம்ப் பகுதியை சேர்ந்த சுரேஷ் (25), பவானி பூக்கடை வீதியை சேர்ந்த கோபி (30) என்பதும், அவர்கள் ரேஷன் அரிசியை கடத்துவதற்காக காரில் ஏற்றியதும்,’ தெரியவந்தது. இதைத்ெதாடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலுமு் 600 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து ஈரோடு குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.