அரசு ஒப்பந்ததாரரை வெட்டிய 5 பேர் கைது

வேடசந்தூர் அருகே அரசு ஒப்பந்ததாரரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-26 15:05 GMT
வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 43).  நாடார் உறவின் முறை முன்னேற்ற சங்க நிர்வாகியும், அரசு ஒப்பந்ததாரருமான இவர் நேற்று முன்தினம் இரவு எரியோடு மந்தை விநாயகர் கோவில் முன்பு சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது முன்விரோதம் காரணமாக 10 பேர் கொண்ட கும்பல், அவரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஒடி விட்டனர். இதில் காயம் அடைந்த பழனிச்சாமிக்கு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே பழனிச்சாமியை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் ெதாடர்பாக எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை அரிவாளால் வெட்டியவர்களை தேடி வந்தார்.  

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ரெட்டியபட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (23), ரஞ்சித் (26), எலப்பார்பட்டியை சேர்ந்த சந்துரு (21) மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பிரவீன் (22), மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த பெரியசாமி (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்