வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விபத்து இல்லாமல் பயணிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விபத்து இல்லாமல் பயணிப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-02-26 12:55 GMT
திருவள்ளூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு, தகுதிச்சான்று பெறுதல் போன்ற பணிகளுக்காக வந்தவர்களை ஒருங்கிணைத்து சாலையில் வாகனங்களை ஓட்டும்போது விபத்து இல்லாமல் பயணிப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில் காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் ஏன் அணிய வேண்டும்? எப்படி அணியவேண்டும்? விபத்தில் காருக்குள் சிக்கி தவிப்பவரை எப்படி வெளியே கொண்டு வருவது போன்ற நேரடி செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. மேலும் இருசக்கர வாகனத்தின் பயணம் மேற்கொள்ளும்போது ஏன் தலைகவசம் அணிய வேண்டும்? தலைக்கவசம் அணிவதனால் என்னென்ன நன்மைகள் போன்றவற்றை தெளிவாக விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.

 இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் தங்கள் அனைவருக்கும் நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது என்று வாகன சூப்பிரண்டு பன்னீர் செல்வத்திடம் தெரிவித்தனர். இனி சாலைவிதிகளை மதிப்போம், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் எனவும் சூளுரைத்தனர்.

மேலும் செய்திகள்