செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.7½ லட்சம் பணம் பறிமுதல்

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.7½ லட்சம் பணம் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-26 12:25 GMT
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நேற்று காலை திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் (வண்டி எண்:16106) வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த ரெயிலில் சந்தேகப்படும் படியான 2 பேரை பிடித்து விசாரித்தனர். மேலும், அவர்களை போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் கட்டுக்கட்டாக ரூ.7½ லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் ராஜஸ்தானை சேர்ந்த கங்கராம் (வயது 33) மற்றும் அச்சத்ராம் (28) என்பதும், இவர்கள் திண்டிவனத்தில் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக தான் பணம் கொண்டு வநத்தாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். 

இருப்பினும் அவர்களிடம் பணத்துக்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் வருமானவரித்துறையிடம் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டு வந்ததால் அவர்களுக்கு ரூ.1½ லட்சம் அபாரதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்