செங்கல்பட்டு மாமண்டூர் பாலாற்று பழைய பாலத்தில் போக்குவத்து தொடக்கம்

செங்கல்பட்டு மாமண்டூர் பாலாற்று பழைய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. மற்றொரு பாலத்தில் சீரமைப்பு பணி ஆரம்பித்துள்ளது.

Update: 2022-02-26 11:48 GMT
போக்குவரத்து தொடக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றம்பள்ளி - மாமண்டூர் இடையில் 633 மீட்டர் தூர பாலம் உள்ளது. இந்த பாலமானது சென்னை - திருச்சி, திருச்சி-சென்னை என இரு மார்க்கத்தின் வழியாக செல்லும் பாலமாக அமைக்கப்பட்டது. இந்த பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது பழுதடைந்தது. முதல் கட்டமாக சென்னை திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய சாலை பாலம் சீரமைப்பு பணிகள் கடந்த 7-ந்தேதி தொடங்கி முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து பழைய பாலாறு பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

சீரமைப்பு பணி

மேலும் அதன் அருகே உள்ள மற்றொரு பாலம் சீரமைக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. அதேசமயம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகன டிரைவர்கள் திண்டிவனத்துக்கு 10 கி.மீ. முன்னதாகவே கூட்டேரிப்பட்டு, வெள்ளிமேடு பேட்டை, வந்தவாசி, காஞ்சீபுரம், செவிலிமேடு, வாலாஜாபாத், தாம்பரம் வழியாக சென்னை செல்லலாம்.

2-வது வழித்தடமாக படாளம் மற்றும் புக்கத்துறை கூட்ரோட்டிலிருந்து பழையசீவரம், காஞ்சீபுரம் செங்கல்பட்டு இணைப்பு சாலை வழியாக சென்னை செல்லலாம்.

அல்லது கருங்குழி வழியாக திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம் வழியாக சென்னை செல்லவும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3-வது வழித்தடமாக மெய்யூர், பிலாப்பூர், பழத்தோட்டம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு இணைப்பு சாலை வழியாக தாம்பரம் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்