போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியன் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-25 23:46 GMT
பூந்தமல்லி,

ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் வினோதன் (வயது 52). இவர் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5-வது பட்டாலியன் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா (48). இவர்களுக்கு விஜய் என்ற மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் விஜய் நேற்று முன் தினம் மாலை அவரது தங்கையை பள்ளியிலிருந்து அழைத்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் படுக்கை அறை கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் விஜய் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, படுக்கை அறையில் உள்ள குளியலறையில் துப்பட்டாவில் தீபா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மனைவி சாவு

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீபாவை மீட்டு, ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராயலாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக தீபா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்று ராயலா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்