உக்ரைனில் சேலம் மாணவர்கள் இருந்தால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் கலெக்டர் கார்மேகம் அறிவிப்பு
உக்ரைனில் சேலம் மாணவர்கள் இருந்தால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என கலெகடர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீட்பு பணிகள்
உக்ரைன் நாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்களும், புலம் பெயர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மாநில தொடர்பு அலுவலராக ஜெசிந்தா லாசரஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
அதன்படி உக்ரைனில் இருக்கும் சேலம் மாவட்டத்தை சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு சேலம் மாவட்ட 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. சேலத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையினை 0427-2450498, 0427-2452202 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், சேலம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் என்பவரின் 94450 08148 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.