80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கருப்பாயூரணியில் 80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-25 20:56 GMT
மதுரை, 

மதுரை மாவட்ட தனிப்படையினருக்கு கருப்பாயூரணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வரிச்சூர் பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட தனிப்படையினர் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து குட்கா பண்டல்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ராதா கிருஷ்ணன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 80 கிலோ எடைகொண்ட புகையிலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், புகையிலை விற்பனைக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் மீட்டனர். இதுகுறித்து, கருப்பாயூரணி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடக்கிறது.மதுரை மாவட்டத்தில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்குபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்