கார் மோதி 3 மாணவிகள் காயம்
அருப்புக்கோட்டை அருகே கார் மோதி 3 மாணவிகள் காயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் முத்துச்செல்வி (வயது 16). இவர் வெள்ளையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முத்துச்செல்வி தனது பள்ளி தோழிகளுடன் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது ஆமணக்குநத்தம் கண்மாய் கரை அருகே பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக முத்துச்செல்வி மற்றும் அவருடைய தோழிகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முத்துச்செல்வி மற்றும் அவருடைய தோழிகள் அமுதா, திவ்யபிரபா ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவிகளை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.