மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-02-25 19:02 GMT
சாத்தூர், 
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இருக்கன்குடி 
 இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
வழக்கத்தை காட்டிலும் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 
சிறப்பு வழிபாடு 
இதில் விருதுநகர் மட்டுமின்றி  திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
அதேபோல சாத்தூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்