அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்
காரியாபட்டி அருகே அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே தண்டியனேந்தல் பகுதியில் இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டு வருவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காரியாபட்டி தாசில்தார் தனக்குமார் உத்தரவின்பேரில் காரியாபட்டி மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், வடக்கு புளியம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரத்தினம், தலையாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் தண்டியனேந்தல் பகுதியில் மணல் அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.
அப்போது தண்டியனேந்தல் பகுதியில் அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் மணலை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.