உக்ரைனில் பதுங்கு குழியில் தவிக்கும் மாணவர்களை பத்திரமாக அழைத்துவர வேண்டும்
உக்ரைனில் பதுங்கு குழியில் தவிக்கும் மாணவர்களை பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று விவசாயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை,
உக்ரைனில் பதுங்கு குழியில் தவிக்கும் மாணவர்களை பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று விவசாயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கால்நடை மருத்துவம்
சிவகங்கை மீனாட்சி நகரில் வசிப்பவர் கண்ணா சுப்பிர மணியன் (வயது.45). இவருக்கு 2 மகனும் ஒரு மகளும் உள்ளனர். விவசாயியான இவரின் மூத்த மகன் ஹர்ஷவர்தன் கால்நடை மருத்துவம் படித்து வருகிறார். தற்போது ரஷியா வுடன் நடக்கும் போரால் அவர் உக்ரைனில் பதுங்குகுழியில் பாதுகாப்பாக இருப்பதாக தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவருடைய தந்தை கண்ணா சுப்பிரமணியன் கூறியதாவது:- படிப்பதற்காக கடந்த ஆண்டு உக்ரைனுக்கு என் மகன்சென்றார். அங்கு அவர் சுமிஸ்டேட் என்ற இடத் தில் உள்ள சுமி நேஷனல் அக்ரேரியன் யுனிவர் சிட்டியில் கால்நடை மருத்துவ படிப்பு படிப்பதற்காக சென்றுள்ளார்.
இந்த படிப்பை 6 வருடங்கள் படிக்க வேண்டும் என்னுடைய மகனுக்கு இது 2-வது வருடம். அவர் சிவகங்கை வந்துவிட்டு கடந்த செப்டம்பர் மாதம் தான் ஊருக்கு சென்றார். தினசரி அங்கிருந்து என்னுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசுவார் தற்போது கூட அங்கு நடைபெறும் போர் குறித்து கூறினார்.
பாதுகாப்பு
நேற்று முன்தினம் அவர் தங்கியுள்ள விடுதியின் அருகிலும் மற்றும் விடுதி அருகே உள்ள சர்ச் ஒன்றின் அருகிலும்ரஷிய படைகள் வீசிய குண்டுகள் விழுந்்துள்ளதாக தெரிவித்தார். தற்போது இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காரைக்குடி, திருப் பத்தூர், தேவகோட்டை போன்ற இடங்களில் இருந்தும் மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க சென்றுள்ளார்கள். அனைவரும் பத்திரமாக இருப்பதாகத்தான் கூறுகிறார்கள். இருந்தாலும் என் மகன் உள்பட அனைவரையும் பத்திரமாக சொந்த ஊருக்கு அழைத்துவர தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.