மொபட் திருடிய வாலிபர் கைது

மொபட் திருடிய வாலிபர் கைது

Update: 2022-02-25 17:08 GMT
வெள்ளகோவில், 
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையைச் சேர்ந்தவர் குமாரசாமி(வயது 47). இவர் நேற்று முன்தினம் வெள்ளகோவில் புதிய பஸ் நிலையம் அருகே தனது மொபட்டை நிறுத்திவிட்டு டீ கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த மொபட் காணாமல் போனது தெரியவந்தது. 
இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று வெள்ளகோவிலில் முத்தூர் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த மொபட்டை நிறுத்தி விசாரித்தபோது, அவர் வெள்ளகோவில், காமராஜபுரத்தை சேர்ந்த  சதீஷ் (26) என்பதும், அவரிடம் இருந்ததுகுமாரசாமி மொபட் என்பதும் தெரியவந்தது, உடனே போலீசார் மொபட்டை பறிமுதல் செய்து சதீசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்