வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூர்:
திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமாரின் வங்கி கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 478-ஐ ஆன்லைன் மூலமாக மோசடி செய்ததாக திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த காடுவெட்டிப்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விஜயகுமார் மீது ஆன்லைன் மோசடி செய்ததாக சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யும்போது அச்சத்தையும், பாதுகாப்பற்ற தன்மையும் ஏற்படுத்தும் விதமாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயலில் ஈடுபட்டதால் விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டார்.
அதன்படி கோவை சிறையில் உள்ள விஜயகுமாரை ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு அவரிடம் நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 9 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.