தூக்குப்போட்டு தொழிலாளி கைது

தூக்குப்போட்டு தொழிலாளி கைது

Update: 2022-02-25 16:34 GMT
தூக்குப்போட்டு தொழிலாளி கைது
ஆனைமலை

ஆனைமலையை அடுத்த கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது45) கூலி தொழிலாளி. இவரது மனைவி பெயர் மோகனா.  மது பழக்கத்துக்கு அடிமையான வேலு அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்துள்ளார். 

சம்பவத்தன்று கணவன, மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் வேலு,  வீட்டுக்கு பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்